காதலிக்க நேரமில்லை

பெண்களுக்கு தனது வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். சிறு வயதில் இருந்தே யூஎஸ்ஏ வில் பிறந்து வழந்த ஒரு தமிழ் பெண், தமிழ் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கும் பாடகி, மாடல், அகிலா  யூஎஸ்ஏ  வில் இருந்து கொண்டே நம் தி கோவை மெயில் க்கு அளித்த சிறப்பு பேட்டி காண்போம்.

ஏ ஆர் ரஹ்மான் பற்றி? 

என் சிறு வயதில் இருந்து எனக்கு ரஹ்மானின் இசை எனக்கு பிடிக்கும். அவருடைய இசைப் பள்ளியில் நான் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு கிடைத்த பாக்கியம் என்று எப்பவும் கூறுவேன்.

இந்தியா கலச்சாராத்தை நீங்கள் இழந்ததை போல் உணர்ந்து உள்ளீர்களா?

கண்டிப்பா கிடையாது. என் அப்பா அம்மா இருவரும் இந்தியா கலச்சாரத்தையும்  பண்பாட்டையும் எனக்கு சொல்லி கொடுத்து உள்ளனர். என் உயிரோடு ஒன்றி போய் உள்ளது.

உங்களை கவர்ந்த நடிகை ?

பிரியங்கா சோப்ரா எனக்கு பிடித்த நடிகை. அவர்தான் எனக்கு எப்பவும் ரோல் மாடல்.

மனதில் இருக்கும் காதல் ?

அதற்கு இன்னும் நேரம் வரவில்லை.  எனக்கு நிறைய பொறுப்புள்ளது. சாதிக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளது. காதல் வந்தாலும் எனக்கு காதலிக்க நேரம் இல்லை.

அப்பா அம்மா பற்றி சொல்லுங்கள்?

என்னை புரிந்து கொண்டு நடப்பவர்கள், என் கனவை மதிக்க கூடியுவர்கள், எனக்கு கிடைத்த நண்பர்கள் என்று கூட சொல்லலாம்.

திறமை ?

மனிதனா பிறந்த அனைவருக்கும் இருக்க கூடிய விஷயம். அதை நாம் உணரும் பொழுது அதை மிக கச்சிதமாக கையண்டால் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

இசை ?

இசை மேல் எனக்கு மிக பெரிய மரியாதை உள்ளது. என் சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதத்தை கற்று வருகிறேன்.  பல விதமான இசையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சித்து வருகிரேன்.

பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி ?

பெண்ணாக பிறந்த அனைவரும் பல பிரச்சனை களை சந்தித்து வருக்கின்றனர்.  இதற்கு முற்றி புள்ளி வைக்க முடியாது. ஆனால் நாம் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

மாடலிங் ?

என்னை அழகாக உணர கூடிய இடம்.

வரும் காலங்களில் உங்கள் பயணம்?

நல்ல பாடகியாக உங்கள் முன் வந்து நிற்பேன். காதம்பரி என்ற தமிழ் திகில் படத்தில் நடித்து வருகிரேன். அந்த படம் வெளியாகும் பொழுது தமிழாக மக்கள் அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று இந்த நேர்காணல் தொகுப்பில் கேட்டு கொள்கிறேன். நன்றி.  ஸ்வீட் டே. பாய்.

–  பாண்டியராஜ்.