மாவட்ட மைய நூலகத்தில் இலவச வைபை வசதி

கோவை மாவட்ட மைய நூலகத்தில் இலவச வைபை ( Wi-fi ) வசதி ACT நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாசகர்கள் இவ்வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாவட்ட மைய நூலக வளாகத்தை ஸ்மார்ட் வாசிக்கும் மண்டலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பேரில் Magzter app ன் மூலம் அளவற்ற வார, மாத பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை இலவசமாக படிக்கவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் பொது மக்கள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட மைய நூலகர் பே.இராஜேந்திரன் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.