மக்களை உணர்ந்தவன்!

தொண்டன், சமுத்திரகனி என்ற சொன்ன உடன் கருத்து சொல் பவர் என்று பலர் சொல்வார்கள். ஆனால் நம் நாட்டில் உள்ள பிரச்சனைகளை நமக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு இயக்குனர் இருக்கிறார் என்றால் நாம் அவரை வரவேற்று போற்றி புகழ வேண்டும். தொண்டன் திரைப்படம் மக்களை கவரும் வகையில் இருக்கின்றதா என்றால், கண்டிபாக இருக்கின்றது என்று சொல்லலாம்.

ஒரு ஆம்புலென்ஸ் ஓட்டும் டிரைவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எவ்வளவு சுவாரசியமாக காண் பிக்க முடியுமோ அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார் சமுத்திரகனி.

நம் நாட்டில் அரசியல் கட்சிகள் எப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்கள், அதனால் மக்கள் எவ்வளவு பாதிப்பு அடைகிறார்கள் என்பதை மிக சிறப்பாக சொல்லியிருப்பது படத்தின் முக்கியமான பலம் என்று சொல்லலாம். விக்ராந்த் சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பான நடிப்பை நம்மால் பார்க்க முடிகிறது.

கஞ்சா கருப்பு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இவர் பேசும் வசனம் மக்களின் மனதில் நீங்காமல் இருக்கின்றது. ஆபாசம் இல்லாத காதல் காட்சி, அவதூறு சொல்லாத அளவுக்கு இருக்கும் வசனம் இது எல்லாமே படத்தின் முதுகு எலும்பாக உள்ளது.

ஒரு ஆம்புலென்ஸ் டிரைவருக்கும், அரசியல் வாதிக்கும் நடுவில் நடக்கும் பிரச்சனை தொண்டன் படத்தின் கதை கருவாக உள்ளது. மனிதனாக பிறந்த அனைவரும் நல்லது மட்டும் பண்ண வேண்டும் நல்லதை மட்டும் நினைத்து வாழ வேண்டும் என்பதை திரைக்கதை வடிவத்தில் படம் பார்க்கும் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறார் சமுத்திர கனி. சூரி படத்தில் 15 நிமிடம் வந்தாலும் அவரின் நடிப்பு மக்களை நன்றாக ரசிக்க வைக்கும் அளவுக்கு இருப்பது அவருடைய  வளர்ச்சியில் தொண்டன் படம் முக்கிமானதாக இருக்கும்.

ஒளிப்பதிவு ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்ட் நாதன் பணியாற்றியிருக்கிறார்கள். கதைக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு ஒளிப்பதிவு செய்திருப்பது படத்துக்கு மிக பெரிய பக்க பலம்.

ஒரு இயக்குனர் மக்களை உணர்த்தவனாக இருந்தால் நல்ல கருத்துகளை திரைப்படங்களில் கூறுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். தொண்டன் மக்களின் மன வலி.

-பாண்டியராஜ்