பேங்காங்கில் இந்திய கலாச்சாரம்!

ஹிந்தி திரைப்படத்தில் தனுக்கென்று ஒரு தனி இடத்தை வைத்திருக்கும் ராம் கோபால் வர்மாவிடம் முன்னணி உதவி இயக்குனராக பனிபுரிந்து கொண்டு இருக்கும் நித்திய ரமேஷ் பேங்க் காங்கில் உள்ள விளம்பர படத்தில் பணியாற்றிய பொழுது ஏற்பட்ட சுவாரஸியமான சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதை காண்போம். ஏப்ரல் மே மாதம் வந்த உடன் எல்லோரும் விடுமுறை நாட்களை எப்படி சந்தோசமாக கொண்டாடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் பிடித்த செயலை விடுமுறை நாட்களில் செய்வது எப்பவும் ஒரு தனி சந்தோஷம்தான். பேங்க்காங்க்கில் நம் இந்திய சினிமாவுக்கு ஒரு தனி மரியாதை இருக்கின்றது.

பேங்க்காங்க்கில் உள்ள மக்கள் அனைவரும் சமீபத்தில் கூறுவது பாகுபலி என்ற சொல். ஒரு இந்திய திரைப்படம் உலக அளவில் பெரும் புகழும் எடுத்து கொடுத்ததற்கு இந்திய சினிமா கலைஞர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளது என்பதை நித்தியா ரமேஷ் பேங்க்காங்க்கில் உணர்ந்து உள்ளார்.

நம் உணவு கலாச்சாரம் இதில் நாம் நாட்டின் வாசனை இருக்கின்றது என்பதை நித்ய ரமேஷ் பல இடங்களில் பார்த்துள்ளார். பேங்க்காங்க்கில் நைட் கிளப் போன்ற இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வது, நம் நாட்டின் பாரம்பரிய உணவு பழக்கங்களை அவர்கள் உணர்வோடு சேர்த்து சமைப்பது போன்ற விஷயங்கள் நம் நாட்டின் பெருமைகளை உணர்த்துவதாக உள்ளது.

  • பாண்டியராஜ்.