டாக்டர்.ஆர்.வி கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில்  நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக “நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்” அண்மையில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு  டாக்டர்.ஆர்.வி  கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர்  ராமகிருஷ்ணன் ஐயா மற்றும் கல்லூரி முதல்வர் வே. சுகுணா தலைமைவகித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின், செயலாளர், சங்கரநாரயணன்,சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர்கள்  டி.உமாபிரியா மற்றும் பிரபாகரன்  இம்முகாமை ஒருங்கிணைத்தனர்.