அஸ்வின் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

 

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி அஸ்வின் பி.பி.ஜி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி நர்சிங் கல்லூரி மாணவர்கள் இணைந்து புற்றுநோயின் அறிகுறிகள், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், மகளீரை தாக்கும் புற்று நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு  பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை டாக்டர்.L.P.தங்கவேலு,தலைவர், அஸ்வின் மருத்துவமனை தலைமையில், டாக்டர். விஜயகார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்தப் பேரணி மகளீர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி வ.உ.சி பூங்காவை அடைந்தது. இப்பேரணியின் போது பொதுமக்களுக்கு புகையிலை எதிர்ப்பு பிரசுரங்களை வழங்கப்பட்டது.