கோவை, சங்கரா கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

 சமீபத்த்தில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா மற்றும் விஜயா பதிப்பகம், கோவை, இணைந்து ‘தமிழ் இலக்கியங்கள் : பன்முக நோக்கு’ என்னும் பன்னாட்டுக் கருதரங்கத்தை நடத்தினர்.  இந்த கருத்தரங்கமானது சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்த்துறைத் தலைவர் பூ.மு.அன்புசிவா வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் எச். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மலேசியா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் சு. குமரன் கருத்தரங்க நோக்க உரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறை மேனாள் இயக்குநர் கா.மு. சேகர் ஆய்வு நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியபோது தமிழ் மொழியின் முக்கியத்துவம், பண்பாடு, கலாச்சாரம், சங்க கால மக்களின் வாழ்க்கை முறைகள், போர் முறை, ஆதி மனிதனின் பண்பாடுகள் போன்றவை பற்றி விரிவாகப் பேசினார். கவிஞர் புவியரசு, மு.வேலாயுதம், கவிஞர் அகிலா, முனைவர் அரங்க மல்லிகா மற்றும் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளநிலை மாணவர் நாகராஜ் நன்றியுரையாற்றினார்.