வி.எல்.பி. கல்லூரி சார்பில்  விழிப்புணர்வு பேரணி 

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யங் இந்தியன்ஸ், சமூக விரிவாக்க மையம், ஒய் ஆர் சி, தேசிய நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து தொண்டாமுத்தூரில் “வாக்களிக்கும் உரிமை” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். நிகழ்வில் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் வரவேற்பு வழங்கினார்.

இப்பகுதி காவல்துறை ஆய்வாளர் வடிவேல் குமார், துணை ஆய்வாளர் சீதாராமன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்ததோடு தேர்தல் நடைமுறைகளைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொண்டாமுத்தூரிலிருந்து நடைப்பயணத்தைத் துவங்கிய மாணவர்கள் 100% வாக்கிற்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். குடிமக்கள் அனைவரும் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.