மீண்டும் வருகிறது 1 ரூபாய் நோட்

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அச்சடிக்கப்பட்டு புதிய வடிவில் 1 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டில் இருந்து பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஒரு ரூபாய் நோட்டைவிட நாணயங்களை தயார் செய்யவே செலவு குறைவாக இருப்பதாக காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில், புதிய வடிவில் ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பே மத்திய அரசு,வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது