என்.ஜி.பி. கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை மற்றும் திருச்சிராப்பள்ளி மென்மொழி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் குறித்த தொழில்துறை தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும்.

இதில் கல்லூரி  நிறுவனத்தின் செயலாளர் டாக்டர். தவமணி டி.பழனிசாமி மற்றும் திருச்சிராப்பள்ளி மென்மொழி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுரேஷ் கண்ணையன் கையெழுத்திட்டனர். இயக்குநர் மதுரா வி.பழனிசாமி மற்றும் முதல்வர் பிரபா, துறைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.