கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் பசுமை இந்தியாவை வலியுறுத்தி மாரத்தான் போட்டி

 கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பசுமை இந்தியாவை வலியுறுத்தி 4 ஆவது மாரத்தான் போட்டி நடைபெற்றது . அதிக அளவில் மரங்கள் நடுவதன் மூலமாக மாசுபடுதலை தடுப்பதுடன் அதிக மழையும் பெற முடியும் . எனவே இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் கே பி ஆர் குழும ஊழியர்கள் உட்பட ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி பெரியய்யா , கோவை ரூரல் எஸ் பி பாண்டியராஜன், கல்லூரியின் தலைவர் கே பி ராமசாமி உள்ளிட்டோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். அதில் கல்லூரியின் முதன்மை செயலர் நடராஜன் , கல்லூரியின் முதல்வர் பொம்மண்ண ராஜா , பேராசிரியர் ராஜேந்திரன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் , அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் பொது மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 8 கிலோ மீட்டர் தூர ஓட்டம் கருமத்தம்பட்டியில் தொடங்கி கல்லூரியில் முடிவுற்றது. 6 முதல் 9 வயது வரை படிக்கும் மாணவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் மற்றும் பொதுப்பரிவு பெண்கள் கலந்து கொண்ட 5 கிலோ மீட்டர் தூர இந்த போட்டி கணியூரில் தொடங்கி கல்லூரியில் நிறைவு பெற்றது. இப்போட்டியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய, கல்லூரியின் தலைவர் கே பி ராமசாமி அடித்த தலைமுறை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நாம் ஏதாவது விட்டுசெல்ல வேண்டும் என்றால் அது மரங்களே , இதை உணர்ந்தே கே பி ஆர் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சம் ஐம்பதாயிரம் மரங்கள் நடப்பட்டு உள்ளது என கூறினார். நிகழ்ச்சியில் பேசிய மேற்குமண்டல காவல்துறை ஐஜி பெரியய்யா , மனித வாழ்வில். மரங்கள் மிக முக்கிய பங்காற்றுகிறது. மரங்களில் இருந்து கிடைக்கும் தூய்மையான ஆக்ஸிஜன் இரத்த ஓட்டத்தை செம்மைபடுத்தி உடல் ஆரோக்கியம் காக்கிறது என்றார்.

இதில் சூலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,கோவை நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துசாமி, கருமத்தம்பட்டி காவல்துறை ஆய்வாளர் சண்முகம் , சூலூர் காவல்துறை ஆய்வாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.