சிபிஎஸ்இ  பள்ளி சீனியர் மாணவர்களுக்கு 41வது சகோதயா விளையாட்டு போட்டிகள் கே பி ஆர் கல்லூரியில் நடைபெற்றது

கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சிபிஎஸ்இ  பள்ளி சீனியர் மாணவர்களுக்கு 41வது சகோதயா விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது.  இந்த போட்டியில் 62 பள்ளிகளில் இருந்து 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் துவக்க விழாவிற்க்கு சமூக ஆர்வலர் அன்பரசன், கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு.கே.பி.ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு கே.பி.ஆர்.கல்லூரியின் முதன்மை செயலர் முனைவர்.நடராஜன், கல்லூரியின் முதல்வர்.முனைவர்.கே.பொம்மண்ண ராஜா, பேராசிரியர் முனைவர்.ராஜேந்திரன் மற்றும் சகோதயா ஸ்கூல் காம்ப்லஸ்ஸின் தலைவரும் அங்கப்பா பள்ளியின் முதல்வருமான திருமதி.நவமணி, நேசனல் மாடல் பள்ளியின் முதல்வரும், இந்த அமைப்பின் செயலாளருமான திருமதி.கீதாலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்போட்டியின் முடிவில் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கே.பி.ஆர். கல்லூரியின் முதன்மை செயலர் முனைவர்.நடராஜன், கல்லூரியின் முதல்வர்.முனைவர்.கே.பொம்மண்ண ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்கள். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், நேசனல் மாடல் பள்ளியும், நவ பாரத் நேசனல் பள்ளியும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.   இந்த நிகழ்ச்சிக்கு தேவையான மைதானம், விளையாடடு உபகரணங்கள், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளை கே.பி.ஆர்.கல்லூரி செய்திருந்தது.