கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய நிலை ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியின் கணினி அறிவியல் துறை, ISTE & CSI இணைந்து தேசிய நிலை ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி “DEEP LEARNING FOR MEDICAL IMAGE PROCESSING “ என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெற்றது. கனடாவை சேர்ந்த யாஷ் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர், வளர்ந்து வரும் துறையான செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் கற்றல், ஆழமான கற்றல் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரி இயக்குனர் அன்பழகன், கல்லூரி முதல்வர் மோகன் தாஸ் காந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் தீபா, உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.