சினிமாவில் கலக்கும் பி.எஸ்.ஜி. மாணவர்

விஜய், சிவ கார்த்திகேயன், ஜெயம் ரவி, சிம்பு, அதர்வா போன்ற இன்னும் பல ஹீரோக்களுக்கு ஆடை வடிவு அமைப்பாளரக இருக்கும் சத்யா.N.J இப்போது புதுவிதமான செயலில் ஈடுபட உள்ளார்.

கதைக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொரு ஆடைகளையும் தயார் பண்ணி அதில் வித்தியாசமான ஸ்டைலாய் அறிமுகப்படுத்த உள்ளார்.

சமீபத்தில் ‘கிகிகி’ படத்தின் போஸ்டர்களில்கூட சிம்பு மற்றும் தமன்னாவின் ஆடைகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.

சத்யா.N.J, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் காஸ்ட்யூம் டிசைனர் படிப்பை முடித்து விட்டு, சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக வலம் வரவேண்டும் என நினைத்து, பின்னர் சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் நம் திறமையை காட்ட வேண்டும் என முடிவு எடுத்து இப்பொழுது மிகப்பெரிய காஸ்ட்யூம் டிசைனராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

எதிர்காலத்தில் நல்ல நடிகனாகவும்,  ஸ்டைலான காஸ்ட்யூம் டிசைனராகவும் தமிழ் சினிமாவில்  முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.