2.O திரைப்படம் கோவையில் வெளியாகியது- ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குநர் சங்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள 2.O திரைப்படம் கோவையில் சுமார் 60 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது.காலை 7 மணியளவில் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர் காட்சியாக 2.O திரையிடப்பட்ட நிலையில் காலை முதலே ரசிகர்கள் திரையரங்கங்கள் முன்பாக திரண்டனர்.பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள் திரையரங்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும் தேங்காய் உடைத்து பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.மேலும் மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் விதத்தில் அனைத்து திரையங்குகளிலும் காவல்துறை பாதுகாப்புடன் காட்சிகள் நடைபெற்றன.