சூரிய ஒளி தாக்குதலில் இருந்து தோலை பாதுகாப்பது எப்படி?

சூரிய ஒளியால் தோலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன…
நமது தோல் மேல் பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி என 3 அடுக்குகளை கொண்டது. நடுப்பகுதி தோலின் உருவத்திற்கு அழகும், மென்மையும் தருவதாகும். நம் உடலில் தொடர்ந்து சூரிய ஒளியில் பட்டுக்கொண்டிருந்தால், அதிலுள்ள புற ஊதா கதிர்கள் நம் தோலின் அடிப்பகுதி வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் பள, பளப்பையும் மென்மையையும் அழகையும் இழக்கிறது.
இது தொடர்ந்தால் தோல் வறட்சி, சுருக்கம் ஏற்பட்டு, தோல் தொங்க தொடங்கும். கண்ணின் அடிப்பகுதியில் கருவளையம், வாய், நெற்றியில் சுருக்கம் ஏற்படும். மூக்கு, கன்னங்களில் பாதிப்பும், தோல் முழுவதும் கரும்புள்ளிகள் உண்டாகும். சூரிய ஒளி தொடர்ந்து நம் தோலை தாக்கி கொண்டிருந்தால் 90 சதவீத தோல் வயோதிக தன்மை அடைந்து விடும்.
* சூரிய ஒளி தாக்குதலில் இருந்து தோலை பாதுகாப்பது எப்படி…
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியில் புற ஊதா கதிர்கள் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது ‘மாய்சரைசர் க்ரீம்’ பூசுவதால் பலனில்லை. குடை, துப்பட்டா, தொப்பி போடுவது புற ஊதா கதிர்களை தடுக்காது. வெயிலில் செல்வதை தவிர்க்க முடியாவிட்டால் தோல் சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கும் ‘சன் ஸ்கிரீன் க்ரீம்’ தோல் மீது போட்டுக்கொண்டு சென்றால் சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் தோலை பாதிக்காது.
சன் ஸ்கிரீனை வெளியில் செல்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு பூசிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை உபயோகிக்க வேண்டும். காட்டன் மற்றும் லினன் ஆடைகளை அணிய வேண்டும். இது தவிர தோல் இளமையாக இருக்க சத்தான சரிவிகித உணவை உண்ண வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். டீ, காபி தவிர்த்து க்ரீன் டீ குடிக்க வேண்டும்.
* சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட தோலுக்கு சிகிச்சைகள் என்னென்ன…
சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட தோலுக்கு சிகிச்சை அளிக்க ‘கெமிக்கல் பீல்ஸ்’ லேசர்ஸ் மற்றும் இன்ஜெக்‌ஷன்’ மற்றும் ‘டெர்மல் பில்லர்ஸ்’ என பல நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. ‘கெமிக்கல் பீல்’ முறையில் ‘கிளைக்கோலிக் பீல்ஸ்’ சிகிச்சை நல்ல பலன் தரும்.தோலின் பாதிப்புகளுக்கு எற்ப, சிகிச்சை முறைகள் மாறுபடும். இவ்வகையான சிகிச்சை மூலம் செல் பாதிப்பு நீங்கி அழகான, மென்மையான தோலையும், இயற்கையான உடல் நிறத்தையும் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, தோல் மற்றும் அழகு பராமரிப்பு, முக அழகு சீரமைப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷி.பவித்ரா, கே.எம்.சி.எச்.மருத்துவமனை, அவினாசி ரோடு, கோயம்புத்தூர். முன்பதிவு மற்றும் தொடர்புக்கு மொபைல்: 733 9333 485, தொலைபேசி: 0422 – 4323104, இ-மெயில்: drpavithra@kmchhospitals.com ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.