தொழில் வளாக சாலை விரிவாக்க  கோரிக்கை

மும்பை- பெங்களூரு தொழில் வளாக சாலை விரிவாக்கத் திட்டத்தை கோவை வரை கொண்டு வர கோரிக்கை

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து மும்பை- பெங்களூரு தொழில் வளாக சாலை விரிவாக்கத் திட்டத்தை கோவை வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை மனுவினை அளித்தார்.