ஜோஸ் ஆலுக்காஸ் – புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா

கோவை நூறடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையின் புதுப்பிக்கட்ட ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மேலும் ஆறாம் ஆண்டு விழாவும் நடைபெற்றது. இந்த ஷோரூம் திறப்பு விழாவிற்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சினிமா நடிகை ஷாமிலி, கோகுலம் கார்டன் குரூப் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின், சேர்மேன் ஜோஸ் ஆலுக்கா, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்கள் வர்கீஸ் , பால் ஆலுக்கா , ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர். திறப்பு விழா சலுகையாக தங்க நகை மற்றும் வைர நகைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் மெகா பரிசும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.