கோவையில் தனுஷ் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்

சமீபகாலமாக தனுஷ் அவர்கள் நடித்து வந்த வடசென்னை என்ற திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை தொடர்ந்து இன்று வட சென்னையின் படமானது  வெளியானது .இதில் திரையரங்கு முன் கூடிய கோவை மாவட்ட தனுஷ் நற்பணி மன்ற ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், தனுஷ் போஸ்டர்களுக்கு பால் ஊத்தியும்,படம் வெற்றிபெற வேண்டுமென்று உற்சாகத்துடன் கொண்டாடினர்.இதில் கோவை மாவட்ட தலைவர் மணி,செயலாளர் சங்கர், பொருளாளர் அந்தோணி, பொறுப்பாளர் சதீஷ், அமைப்பாளர் பாலா உள்ளிட்ட ஏராளமானோர் பட துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.