பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றப்படும்

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்ப விளக்கு அகற்றப்படுவதன் நோக்கம், அனைத்து இந்தியர்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கார்களில் சிவப்பு விளக்கு ஒளிர வீதிகளில் வலம் வருவது விஐபி கலாச்சாரத்தின் அங்கமாக இருந்து வருகிறது. இதற்கு முடிவுகட்டும் நோக்கில், வரும் மே மாதம் முதல் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நேற்று தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீ அணைப்புத் துறை வாகனங்கள், குடியரசுத்தலைவரின் வாகனம் தவிர பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கார்களில் இருந்து மே 1ம் தேதி முதல் சிவப்பு விளக்க அகற்றப்படும் என நிதின் கட்காரி அறிவித்தார்.