ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா, சிம்ரன் !!

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் , ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா , சிம்ரன் டார்ஜிலிங் பகுதியில் உள்ள ரேஞ்சர் கல்லூரியில், ரஜினி , பாபிசிம்ஹா , நரேன் உள்ளிட்டோரை வைத்து முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு டேராடூன் பகுதியில் ரஜினி , சிம்ரன் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதியில் இருந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியது. ஏ ஆர் ரகுமான் இடத்தில் செட் போட்டு படத்தை எடுக்கின்றனர்.

செப்டம்பர் முதல் வாரத்தில் ரஜினி, பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்க உள்ளனர். இந்த சூழலில் ரஜினியின் காதலியாக நடிக்கும் சிம்ரனின் காட்சி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் , புதிய தகவலாக ரஜினிக்கு ஜோடியாக இன்னொரு நடிகையாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் ரஜினிக்கு இந்த படத்தில் மனைவி , குடும்பங்கள் யாரும் இல்லாததால் இவரும் அவரது இன்னொரு காதலியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரிஷா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.