முத்தக்காட்சியில் நான்…

– அதித் ராய் ஹைட்ரி

ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட ஆசைகளும் எப்பொழுது நிறைவேறும் என்று சொல்ல முடியாது. அதே நேரம் விடா முயற்சியால் வெற்றி பெற்றவர்களையும் இந்த சமுதாயத்தில் கண்டிருக்கிறோம். அதிலும் ஒரு பெண் வெற்றி பெறுவது, அதிலும் திரைத்துறையில் பிரபலமாவது சிரமமான காரியம். ஏனெனில், சினிமா என்றவுடன் திறமை, நம்பிக்கை, அதிர்ஷ்டம் ஆகியன முக்கியம் என்று சொல்லுவர்.

அப்படியிருக்க, எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கடினமான விஷயம். அதிலும் பெண்கள் குறிப்பிட்ட வயதிற்குள் தான் வெற்றி பெற முடியும் என்று சினிமா துறையினர் கூறுவர். ஆனால் வயதைவிட திறமையும், தன்னம்பிக்கையும் கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று வெற்றி பெற்றவர் ‘‘அதித் ராய் ஹைட்ரி’.

இவர் அறிமுகமானது மலையாளப் படத்தில் தான். தொடர்ந்து, ஹிந்தியில் ‘டெல்லி 6’ என்ற படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்தார். இதில் இவருடைய பங்களிப்பு குறைவாக இருந்தாலும் தனது முக பாவனைகளால் இத்திரைப்படத்தில் வித்தியாசப்பட்டார்.

‘ஏசாலிஜிந்தகி’ என்ற திரைப்படத்தில் மிக தத்ரூபமாக நடித்து பாலிவுட் சினிமா உலகைத் திரும்பி பார்க்க வைத்தார். கதைக்குத் தேவையான விஷயம் எது என்பதை மட்டும் பார்த்து நடித்தவர் அதித் ராய் ஹைட்ரி. இதற்கு பிறகு ‘மர்டர் 3’என்றபடத்தில் நடித்தார். இது த்ரில்லர் சார்ந்த படம், இதில் இவருடைய நடிப்பிற்கு ஏற்றாற்போல் கதை அமைந்திருந்தது.

கதாநாயகியாக நடிப்பவள் இப்படித்தான் இருப்பாள் என்பதை உடைத்து மக்கள் மத்தியில் இவருக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். ஹிந்தியில் ‘ராக் ஸ்டார்’ என்ற படத்தில் பத்திரிகைத் துறை சார்ந்த பெண்ணாக நடித்திருப்பார். இப்படி இவருடைய சினிமா பயணம் தொடர்ந்து, தற்போது தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வரும் காலங்களில் அதித் ராய் ஹைட்ரி நடிப்புக்கு ஏற¢ற மாதிரியான படங்கள் கிடைத்தால் இந்திய சினிமாவில் இவர் பல சாதனைகளை புரிவார் என்பது மிகையாகாது.

– பாண்டியராஜ்.