கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கம்

கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் மாநில அளவிலான இன்றைய தினத்தில் இளம்பருவத்திற்கான மனநலம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

உலக அளவிலும், தமது நாட்டிலும் மனநோய் பாதிப்பு ஆளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மனஅழுத்தம், தற்கொலை முயற்சி, மனசிதைவு, குடிபோதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

இளம்பருவ மனநோய் பிரிவில் சிகிச்சை பெறும் நோயளிகளை சிறப்பான முறையில் பராமரித்தல் பற்றிய கருத்தரங்கத்தை கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடந்தியது.

கல்லூரி முதல்வர் மாதவி வரவேற்புரை வழங்கினார். கருத்தரங்கை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் தவமணிதேவி பழனிசாமி துவங்கி வைத்து தனது தலைமையுரையில், செவிலியர்களின் மகத்தான பங்களிப்பு மற்றும் இளம்பருவத்தினர் மனநலம் பற்றிய பிரிவில் நோயாளிகளைக் கவனிப்பதில் அவர்களின் திறன்களை மேம்படுத்த செவிலிய மாணவ மாணவிகளை வலியுறுத்தினார். வளர்ந்து வரும் நவீன காலத்தில் செவிலியர்களை முன்னிலைப்படுத்த பல முயற்சிகளை எடுக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மாநாட்டில் 500 க்கு மேற்பட்ட பல்வேறு நர்சிங் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த மனநலவியல் நிபுணர்கள், மனநல அவசர நிலைகளின் மேலாண்மை மற்றும் அதனை தடுப்பதும், எந்த வகையில் நோயாளிகளைக் கைளாளுவதும், அதில் செவிலியர்களின் பங்கு குறித்து விவாதித்தனர். கே.எம்.சி.ஹெச் மனநல மருத்துவர் ஸ்ரீனிவாசன் இவ்விழாவில் கலந்து கொண்டார்.