வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பப்பாளி, தக்காளி ஜாம் தயாரிக்கும் பயிற்சி துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளி பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 6,7 ஆகிய இரண்டு நாட்கள் நடபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் நோனி மூலம் பிளைன், குவாஷ், ஊறுகாய், ஜாம் பயிற்சியும், தக்காளியை வைத்து சாஸ், கெட்சப், பேஸ்ட பியுரி போன்ற பயிற்சியும், பப்பாளியை வைத்து ஜாம், ஸ்குவாஷ் கேண்டி தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 கொடுத்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.

இப்பயிற்சி, வேளாண் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மேலும், தொலைபேசி எண் 0422-6611268 தொடர்புகொள்ளவும்.