கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் என்.சி.சி மாணவர்கள் சாதனை

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்.சி.சி பயிற்சியில் சாதனை படைத்துள்ளனர்.

கோவை 2 டிஎன் ஏர் ஸ்குவாட்ரான் என்.சி.சி ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் கோவையிலுள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. அதில் 13 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவர்கள் பங்கேற்று மொத்தம் 18 விருதுகளில் 9 விருதுகளைப் பெற்றுள்ளனர். பெஸ்ட் டிரில் விருதினை விக்னேஷ் மற்றும் ஹேமந்த்குமார் பெற்றனர். பெஸ்ட் அகெடமிக்ஸ்கான விருதினை அகிலேஷ், இசபெல்லா, சச்சின், மற்றும் சௌமிதா ஆகியோர் பெற்றனர்.

பெஸ்ட் பையரிங்க்கான விருதினை ஜெயசக்திவேல் மணி மற்றும் காவியா ஆகியோர் பெற்றனர். ஓவரால் பெஸ்ட் கேடட் விருதினை இசபெல்லா பெற்றார்.

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழி்ல்நுட்பக் கல்லூரி முதல்வர் அகிலா என்.சி.சி பயிற்சி முகாமில் பங்கேற்று விருதுகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.