இணையம் இல்லாமலேயே இனி ஜிமெயில் பயன்படுத்தலாம்!

இணையத் தொடர்பின்றி மின்னஞ்சல் பார்க்­கும் வச­தியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் படி, பயனர்கள் இணையத் தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், பதிலளிக்கவும், தேடவும் முடியும்.

2021 ஆம் ஆண்டின் நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி ஆஃப்லைன் ஜிமெயில் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இணைய வசதி இல்லாத கிராமப்புற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும்போது இந்த ஆஃப்லைன் சேவை உதவிகரமாக இருக்கும் என கூகுள் தெரிவிக்கிறது.

ஜிமெயில் ஆஃப்லைன் எவ்வாறு உபயோகிப்பது:

1. டிவைஸில் mail.google.com என்ற தளத்திற்கு செல்லவும்.

2. இன்பாக்ஸ்சில் செட்டிங்க்ஸ் சென்று கோக்வீல் பட்டனை (Cogwheel) அழுத்தவும்.

3. ஆல் செட்டிங்க்ஸ் பார்ப்பதற்கான பட்டனை கிளிக் செய்யவும்.

4. இந்தப் பக்கத்தில் ஆஃப்லைன் என்ற டேப் மீது கிளிக் செய்யவும்.

5. எனேபிள் ஆஃப்லைன் இன்பாக்ஸ் என்ற ஆப்ஷன் மீது கிளிக் செய்யவும்.

6. அதில் எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்கரனைஸ் செய்வது என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

7. ஆஃப்லைன் மின்னஞ்சல் சேவைக்கு கணி­னி­யில் எவ்­வ­ளவு இடம் பயன்­ப­டுத்­தப்­படும் எனும் விவ­ரம் காட்­டப்­படும். கடைசி ஏழு நாள்­கள் முதல் 90 நாள்­கள் வரை­யி­லான மின்­னஞ்­சல்­க­ளைச் சேமித்து வைக்க முடி­யும்.

8. ஆஃப்லைன் தர­வு­களை வைத்­தி­ருக்க வேண்­டுமா அல்­லது அழிக்க வேண்­டுமா எனத் தேர்­வு­செய்­த­பின், ‘மாற்­றங்­களைச் சேமி (save changes)’ என்­ப­தை கிளிக் செய்யவும். இப்போது கணி­னி­யில் ஆஃப்லைன் ஜிமெ­யில் வசதி செயல்­பாட்­டிற்கு வந்­து­விடும்.