இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் அதிகம்

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் குரங்கு அம்மை நோயினால் 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த குரங்கு அம்மை நோய் கடந்த 26ம் தேதிக்கு பிறகு 1,076 பேருக்கு பாதித்ததாக, ஆய்வக பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆப்பிரிக்கா நாட்டில் முதன் முறையாக குரங்கு அம்மை நோய் பரவலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடு என, இதுவரை 39 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது.

இந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. இங்கு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குரங்கு அம்மையின் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும்.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவன இயக்குனர் சோபியா மக்கி கூறியதாவது, இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோடை காலங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். இந்நோய் பற்றிய அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இந்த பாதிப்பு பரவாமல் தடுக்க உதவ வேண்டும் என்று கூறினார்.