‘இந்தியா டுடே’ தரவரிசைப் பட்டியலில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி கோவையில் முதலிடம்

‘இந்தியா டுடே’ வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் 3 பாடப்பிரிவுகளில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கோவை மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அகில இந்திய அளவிலும் சாதனைப் படைத்துள்ளது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், 35 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தேசிய தர நிர்ணயக்குழுவின் ‘ஏ-பிளஸ்’ கிரேடு மற்றும் ‘தன்னாட்சி’ அந்தஸ்து பெற்ற இக்கல்லூரி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது.

கல்வி, ஆராய்ச்சி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வரும் இக்கல்லூரி, தற்போது ‘இந்திய டுடே’ வெளியிட்ட கல்லூரிகளில் தர வரிசைப் பட்டியலில் கோவை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

‘இந்திய டுடே’ நிறுவனம் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஆய்வு நடத்தி, பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் கல்லூரிகளைத் தரவரிசைப் படுத்தியதில், பி.சி.ஏ., பி.பி.ஏ., உணவு மற்றும் விடுதி மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகளில் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

இந்தக் கல்லூரி பி.சி.ஏ. பாடப்பிரிவில் கோவையில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 23 வது இடத்தையும், பி.பி.ஏ. பாடப்பிரிவில் கோவையில் முதலித்தையும், அகில இந்திய அளவில் 48 வது இடத்தையும், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறையில் கோவையில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 34 வது இடத்தையும் பிடித்துள்ளன. அறிவியல் பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 52 வது இடத்தையும், வணிகவியல் பாடப்பிரிவில் அகில இந்திய அளவில் 81 வது இடத்தை பிடித்துள்ளன.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அகில இந்திய அளவில் சாதனைப் பட்டியலில் உயர்த்திய முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி பாராட்டினார்.