டெல்லியில் பிரதமர் மோடியுடன் திரௌபதி முர்மு சந்திப்பு

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பளார் திரௌபதி முர்மு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்தல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 21ம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில் திரௌபதி முர்மு நாளை பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இன்று டெல்லி வந்த அவர், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், திரௌபதி முா்முவை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார். அவர் குடியரசு தலைவர் வேட்பாளராக தோ்வானது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது என்றும், அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்பானது என பதிவிட்டுள்ளார்.