உலகளவில் 2,500 க்கும் மேற்பட்டோர்க்கு குரங்கம்மை பாதிப்பு

கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2580 ஆக உயா்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே 42 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1970 களில் ஆப்பிரிக்காவில் இந்நோய் கண்டறியப்பட்டாலும், ஐரோப்பியா்களுக்கும் குரங்கு அம்மை பரவி வருவது மருத்துவ நிபுணா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ கழிவுகள் மூலம் கூட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.