ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 2022 ஆண்டின் கொங்கு மண்டலத்தின் ‘சிறந்த கல்லூரி’க்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

நியூஸ் 18 தொலைக்காட்சி தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் கற்றல் விருதினை வழங்கி வருகின்றது. இவ்வாண்டு சிறந்த கற்றல், புதிய கண்டுபிடிப்பு, சமூகப்பங்களிப்பு, படைப்பாற்றல் என்று பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கொங்குமண்டலத்தின் சிறந்த கல்லூரியாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி தேர்வாகி ‘கற்றல்’ விருதினை பெற்றுள்ளது. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்விருதினை வழங்கினார்.

சென்னை, கிண்டி கிளிண்டன் ஹோட்டலில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் கல்லூரியின் சார்பாக இயற்பியல் துறைத்தலைவர் பூங்குழலி மற்றும் பேராசிரியர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விருதினைப் பெற்றனர்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமியின் சீரிய வழிகாட்டுதலோடு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமாரின் ஆக்கப்பூர்வமான தலைமையில் கோவையின் முன்னனி கல்லூரியாகத் திகழ்ந்து வருகின்றது.

ஏற்கனவே சென்ற ஆண்டு நியூஸ் 18 தொலைக்காட்சியின் புதுமை கண்டுபிடிப்புக்கான விருதினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து கல்வி மற்றும் சமூகப் பணிக்காக பல்வேறு விருதுகளையும் இக்கல்லூரி பெற்றுள்ளது.