அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர இன்று முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு ஒன்றை உயர்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது. அதன்படி,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று ஜூன் 22 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ,பிசிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 7 ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.