என்.ஜி.பி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை மற்றும் புரோபல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் கோவை, நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் புரோபல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் துணைத் தலைவர் ராஜா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்வின் பொழுது கல்லூரியின் முதல்வர் பிரபா மற்றும் இயந்திரவியல் துறைத்தலைவர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.