கோவையில் ‘கொஹிரன்ட்’ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் பிரைவேட் லிமிடெட், தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். கோவையில் இந்நிறுவனம் சரவணம்பட்டியில், ராகம் டவர்சில் தனது புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் சென்னையை அடுத்து, கோவையில் கொஹிரன்ட் நிறுவனத்தின் புதிய அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள்களை உருவாக்கி கொடுப்பது, மொபைல் போன் செயலிகளை உருவாக்குவது, நிறுவனங்களின் தயாரிப்புகள் சரியான முறையில் தீர்வுகளைக் கொடுக்கிறதா என்பதை கண்டறியும் டெஸ்ட் ஆட்டோமேஷன் மற்றும் அதிநவீன ரோபோட்டிக் ப்ராசஸ் ஆட்டோமேஷன் மற்றும் சப்போர்ட் இவற்றுடன் இந்நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு பல்வேறு தளங்களிலான அதிநவீன தீர்வுகளை கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம் நிறுவனம் வழங்குகிறது.

கோவையில் ஆரம்பமாகும் புதிய அலுவலகத்தின் துவக்க நிகழ்ச்சியில் இதன் நிறுவனர் மற்றும் இயக்குனர் அருண்குமார் கோபிநாத் பேசுகையில்: இந்த நிறுவனத்தை 2017-ம் ஆண்டில் 3 பேருடன் துவக்கினோம். தற்போது 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது.

இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. கோவையில் ஆரம்பமாகி இருக்கும் இந்த அலுவலகம் எங்களது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும், முயற்சியின் அடுத்தக்கட்டமாக அமைந்திருக்கிறது.

மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் அதிகமிருக்கும் கோவையில், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க திறன்வாய்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இதன் மூலம் எங்களது நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை எதிர்கால தேவைகளுக்கேற்ப உயர்த்தவும், செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்தவும், உள்ளுர் திறமைசாலிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவும் இது ஒரு நல்ல வாய்ப்பபாக அமைந்துள்ளது என்றார்.