கோவை ஆட்சியருக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கோவை ஆட்சியர் சமீரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இதற்கான விருதினையும், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.