கே.எம்.சி.ஹெச் நிதியுதவியுடன் புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் சார்பாக ரூ.50 இலட்சம் மதிப்பிலான நிதியுதவியுடன் கோவை வடமதுரை பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடத்தின் திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில், கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் லேடீஸ் சர்க்கிள் 23 ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து “ஃபிரீடம் த்ரூ எஜூகேஷன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் 190 முதல் 100 மாணவர்கள் பயனடைகின்றனர்.

கோயமுத்தூர் வடமதுரை பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இந்த கட்டிடத்திற்கான பூமி பூஜை, கடந்த மார்ச் மாதம் போடப்பட்டு, மூன்று மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான மொத்த செலவு ரூ. 50 லட்சமாகும். இந்த மொத்த செலவையும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னணி பல்துறை மருத்துவமனையாக தரமான மருத்துவ சேவைகள் அளித்துவரும் கேஎம்சிஹெச் மருத்துவமனை, தனது சமூக நல அக்கறையின் வெளிப்பாடாக பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து நடத்திவருகிறது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.

கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் ரவுண்ட் டேபிள் 62 தலைவர் சூர்ய நாராயண மூர்த்தி மற்றும் கோயமுத்தூர் மெட்ரோபாலிடன் லேடீஸ் சர்க்கிள் தலைவர் மீனாஷி மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.