டீன் பவுண்டேஷன் சார்பில் நோய்த்தடுப்பு சிகிச்சை விழிப்புணர்வு

பெரிய நாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் காரமடை டீன் பவுண்டேஷன் – SBI அறக்கட்டளையின் அனுக்கிரஹா திட்டமும் இணைந்து நடத்திய பாலியேட்டிவ் கேர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பெரியநாயக்கன் பாளையம், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். சேரலாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். காரமடை டீன் பவுண்டேஷன் – SBI அனுக்கிரஹா திட்ட மருத்துவ அலுவலர் டாக்டர். வெங்கடேசன் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறைகள் பற்றியும், டீன் பவுண்டேசனின் சேவைகளை பற்றியும், SBI அனுக்கிரஹா திட்டத்தின் மூலம் காரமடையின் 17 பஞ்சாயத்துகளில் உள்ள நோயாளிகளுக்கு டீன் பவுண்டேஷன் வழங்கும் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

பாலியேட்டிவ் கேர் என்பது குணப்படுத்த இயலாத நிலையிலுள்ள புற்றுநோய், பக்கவாதம், நரம்பு பாதிப்புகள், தன் அன்றாட வேலையை தானே செய்து கொள்ள இயலாதவர்கள், இத்தகைய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவை ஆகும்.

இத்தகைய நோயாளிகளின் உடல், மனம், சமூகம் சார்ந்த குறைகள், தேவைகளையும் பூர்த்தி செய்யும் முயற்சியில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பாலியேட்டிவ் கேர் சேவையை 3 ஆண்டுகளுக்கும் மேலாக காரமடை பகுதியில் உள்ள 17 பஞ்சாயத்துக்களில் டீன் பவுண்டேஷன் – SBI அனுக்கிரஹா திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து வருகிறது.

இந்த SBI யின் அனுக்கிரஹா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறையில் அதிகமான நோயாளிகள் பயனடைய வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாகும்.