எஸ் பி ஐ வங்கியில்  EMI கட்டணம்உயர்வு

எஸ்பிஐ வங்கியில், வாடிக்கையாளர்களின் வங்கி கடன்களுக்கான EMI கட்டணம் இன்று முதல் உயருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் செலுத்தி வரும் EMI தொகை உயரும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தியுள்ளது.

இதையடுத்து, எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 7.20 விழுக்காட்டில் இருந்து 7.40% ஆக உயர்த்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியின் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதனால்  வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான EMI தொகை உயரும். ஏற்கெனவே, கடன் செலுத்தி வருவோர், புதிதாக கடன் வாங்குவோர் ஆகிய இருதரப்பினருக்குமே EMI தொகை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக பணவீக்கம் பயங்கரமாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை கடந்த மாதமே 4.40% ஆக உயர்த்தியது. அதன்பின், இம்மாதம் மீண்டும் ரெப்போ வட்டி 4.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, எஸ்பிஐ மட்டுமல்லாமல் பல்வேறு வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதனால், கடன் செலுத்தி வருவோருக்கு EMI தொகை அதிகரிக்கிறது.