கபடி போட்டியில் கற்பகம் பல்கலை மூன்றாமிடம்

தென்னிந்திய அளவிலான கபடி போட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய அளவில் பல அணிகள் பங்கு கொண்டன.

முதல் பிரீ காலிறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை அணி, கொக்குளம் அணியை எதிர்கொண்டு 35 – 26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

காலிறுதிப் போட்டியில் கன்னியாகுமரி அணியை எதிர்கொண்டு 37 க்கு 18 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. அரையிறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை அணி தூத்துக்குடி அணியை எதிர்கொண்டு 32 – 35 என்ற புள்ளி அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

வெற்றி பெற்ற வீரர்களை கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் பழனிசுவாமி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.