பார்க் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு நாள் கலை திருவிழாவான, ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை அன்று துவங்கியது.

பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி வரவேற்புரை வழங்கினார். முதல் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அரபிக் குத்து பாடலின் பாடகி ஜோனிட்டா காந்தி பங்கேற்று தனது பாடல் திறமையால் மாணவர்களை மகிழ்வித்தார். இவர் முதல் முறையாக கோயமுத்தூரில் பங்கேற்று பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாள் நடைபெற்ற நிகழ்வில், நடிகர் சதிஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். அதை தைரியமாக சொல்வதற்கு காரணம் தான் அதை உபயோகித்ததே இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை மாணவர்கள் என்றும் விழிப்புடனும், எதையும் எதிர்கொண்டு வெல்லும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சிறு கதையின் மூலம் விளக்கி கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் அதிக சிரத்தையுடன் தங்களது பணிகளை செய்யும் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.