தடகள போட்டியில் எஸ்.டி.சி கல்லூரி மாணவர் வெற்றி

தேசிய அளவிலான 20 வயதிற்குட்பட்டோர் பிரிவு ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் குஜராத் மாநிலம் நாடியாட்டில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர் சன்மத் தர்ஷன் நீளம் தாண்டுதல் போட்டியில் 7.52 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் அவர் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்ற கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.35 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.

மேற்கண்ட சாதனை மாணவரை கல்லூரியின் தலைவர் சேதுபதி, துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜயமோகன், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வி துறை இயக்குனர் பாரதி, துணை இயக்குனர்கள் ரேவதி சதாம் உசேன் உள்ளிட்டோர் பாராட்டினர்.