அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை

பாஜகவினர் அழைத்தால்  சசிகலா அங்கு செல்லட்டும் ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் முடிவு.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ச்சியாக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகின்றனர். பொன்னையன், செல்லூர் ராஜு ஆகியோரை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனும் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான். அதிமுக மட்டுமே தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்க முடியும். பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர் அரசியல் காரணங்களுக்காக சில விஷயங்களை கூறுவார்கள். அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. காலம் வரும்போது மக்கள் உரியவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரைப் பற்றி பேசவேண்டிய அவசியமும் இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து ஏன் பேச வேண்டும்? அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமே இல்லை. தற்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இருவர் சரியான முறையில் கட்சியை வழி நடத்தி வருகின்றனர். பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும். இங்கு அவருக்கு இடமில்லை’ என்று பேசினார்.