ரத்தினம் கல்லூரியில் வேலை வாய்ப்பு தினம்

வேலை வாய்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.

கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு,கடந்த 2019-2022 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் ஏ.செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதன்மை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மாநில உரிமை ஆணையத்தின் தலைவர், கௌரவ நீதிபதி பாஸ்கர், ஐ.ஏ.எஸ் பொது இயக்குநரும், இராஜஸ்தான் மாநில துணைத் தலைமை செயலாளரும் ஆன வெங்கடேஸ்வரன், அண்ணா ஐ.ள.எஸ்.அகாடமி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாட இயக்குநர் பத்மநாபன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

தொடர்ந்து 2019-2022 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்களை வழங்கினர். இதில்,முன்னனி நிறுவனங்களான டிலொட்டி, டி.சி.எஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட சுமார் 76 நிறுவனங்களில் 800 பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முரளிதரன், வேலைவாய்ப்பு அதிகாரி ஹரிகரன், வேலை வாய்ப்புகளை பெறும் மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர், துறை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு ஒன்பது இலட்சம் வரை வருமானம் கிடைக்கும் வகையிலான சில பணி நியமன கடிதங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.