கே.பி.ஆர் கல்லூரியில் கே.சி.எல் கிரிக்கெட் போட்டி

கோவை மாவட்டத்திலுள்ள பன்னாட்டு நிறுவனுங்களுக்கு இடையேயான கோவை கார்போரேட்ஸ் லீக் (KCL) கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு வாரமும் வார கடைசி நாட்களில் (ஜூன் 19 ஆம் தேதி வரை) கே.பி.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதன் துவக்கவிழா ஜூன் 4-ஆம் தேதி கே.பி.ஆர்., கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் கே.பி.ஆர்., பொறியியல் கல்லூரி முதல்வர் அகிலா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த போட்டியில் கோவை மாவட்ட பன்னாட்டு நிறுவனுங்களான விப்ரோ, ஜியோ, தாட் ஒர்க்ஸ், ஆர்.பி.எம் ஏக்லீஸ், கவின் இன்ஜினியரிங், கீர்த்திலால், மஹதி, கே.ஜி.ஐ.எஸ்.எல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் கிரிக்கெட் அணிகள் கலந்துகொள்ள உள்ளன.

முதல் போட்டி தாட் ஒர்க்ஸ் மற்றும் ஆர்.பி.எம் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் ஆர்.பி.எம் அணி வெற்றிபெற்றது.