மாறும் பருவநிலை: விழிப்புணர்வு ஏற்படுத்த டாடா டீ புதிய முயற்சி

உலகின் தட்ப வெப்பநிலை காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டாடா டீ ஜகோரே #ஜகோ ரெ என்ற புதிய பதிப்பை துவக்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காலநிலை பெருமளவில் மாற்றம் பெற்றுள்ளது. அதிக வெள்ளம், வெப்ப நிலை உயர்வு, வறட்சி போன்றவைகளை எதிர் கொண்டுள்ளோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிதியகம் தெரிவித்துள்ளது.

டாடா டீ துவக்கியுள்ள #ஜகோ ரெ, இயக்கமானது, எதிர்கால தலைமுறையினர் எவ்வாறு காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை விளக்குகிறது. மக்களிடையே சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் என்பதை விளக்குகிறது.

டாடா டீயின் 15வது ஆண்டினை முன்னிட்டு புதிய டிவிசி தளத்தில் நடிகர் பங்கஜ் திரிவேதியின் உதவியுடன், முலன் லிண்டாஸ், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வடிவமைத்துள்ளார். வீட்டில் ஏற்படும் சிறிய வெப்பநிலை மாற்றம், உலகளவில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இதில் விளக்கியுள்ளார். தட்பவெப்பநிலை மாற்றத்தால், எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்கியுள்ளார்.

இத்தகைய முயற்சி குறித்து, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் குளிர்பான பிரிவு தலைவர் புனித் தாஸ் கூறுகையில், டாடா டீயின் ஜகோரே, சமுதாயத்தில் சொற்களால் மட்டுமின்றி, செயலாலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற பெற்றோர்களிடையே விழிப்புணர்வை மேற்கொள்கிறது. நிலையான ஆற்றல் முறைகள், பொருட்களை மறு சுழற்சி செய்தல், அதற்கான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல் இவற்றில் அடங்கும் என்றார்.

முல்லன் லிண்டாஸ் தலைமை செயல் அதிகாரி கரிமா கந்தல்வால் கூறுகையில், ஜகோ ரெ கடந்த 15 ஆண்டுகளாக நடிகர் பங்கஜ் திரிபாதியுடன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை உருவாக்கியுள்ளார். புவியில் ஏற்படும் தட்பவெப்ப பருவநிலை மாற்றத்தை எடுத்துச் சொல்லும் விதமாக இது அமைந்துள்ளது. எது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் மாற்றங்கள் என்பதை விளக்கியுள்ளார், என்றார்.