எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் அகில உலக யோகா தினம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை, கடந்த 2015 ஜூன் மாதம் 21ம் தேதியை, அகில உலக யோகா தினமாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2015 ‌லிருந்து இந்திய யோகக் கலையின் மகத்துவத்தைப் பரப்பக் கொண்டாடப்படுகின்றது. மனித நேயத்தை வளர்ப்பது குறித்து, உலக யோகா எட்டாவது தினமாக கடைபிடித்து வருகின்றது.

கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியில், மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டியே‌ யோகா தின விழாவினை வெள்ளிக்கிழமையன்று மாலை நடத்தினர். இதில், 158 மாணவர்களும், 15 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.,

இந்த விழாவில்  கல்லூரியின் துணை முதல்வர் விவேகானந்தன் வரவேற்புரை வழங்கினார். அவர் தனது வரவேற்புரையில், இன்றைய மாணவ சமுதாயத்தின் மன அழுத்தத்தை குறைக்கவும், செய்யும் செயலை  செம்மையாகச் செய்யவும் யோகா பெரிதும் உதவும் எனக் குறிப்பிட்டார்.

சந்திரிகா மேலை நாடுகளில் யோகக் கலையின் தந்தை என்று போற்றப்படும் பரமஹம்ச யோகானந்தர், கிரியா யோக விஞ்ஞானத்தை உலகு எங்கும் பரப்ப மேற்கொண்ட முயற்சிகள் குறித்து ஒரு படக்காட்சி மூலம் விளக்கினார்.

அதன் பின், யோக தியான நிகழ்ச்சிகளை  வழிநடத்தினார். தியானம் செய்ய அமரும் முறை, உடலை இறுக்கி தளர்த்தும் முறை, மன ஒருமைப்பாட்டிற்கு பெரிதும் உதவும் மூச்சோட்டத்தை கவனிக்கும் பயிற்சி ஆகியவற்றை செயல் விளக்கமாக செய்து  கற்றுக் கொடுத்தார்.

மேலும், ஓர் எண்ணத்தை ஆழ்மனதில் பதிய வைத்து வெற்றி பெறுவதற்கான உறுதிமொழி கூறலையும் மற்றும் மன அமைதி பெறுவதற்கான காட்சிப்படுத்தல் நுட்பங்களையும் கற்பித்தார்.

பக்தியுடன் பாடி இறைவனை இதயத்திற்கும் எழுந்தருள வேண்டும் என, இசையுடன்  பாடி அனைவரையும் பாட வழிநடத்தினார் அர்ஜுன். இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் யோகானந்தர் வெற்றியின் விதிமுறை என்ற குறு நூல் இலவசமாக வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியனுக்கு நினைவுப் பரிசாக  யோகானந்தர் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூலை முத்துராமன் வழங்கினார்.