இந்துஸ்தான் கல்லூரியில் பரிசளிப்பு விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 24வது விளையாட்டு விழாவின் பரிசளிப்பு விழா ஜூன் 2ம் தேதி அன்று நடைபெற்றது.

கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுவிழா நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

கோவை, மாநகர போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

கல்லூரி மாணவ, மாணவிகள் A,B,C,D என்று நான்கு குழுக்களாக பிரித்து, 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 4×100, 4×400 தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும், வாலிபால், கூடைபந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், எறிபந்து, கபடி, டேபில் டென்னிஸ், சதுரங்கம், கேரம், இறகுபந்து போன்ற போட்டிகளும்  நடந்தது. அந்த நான்கு குழுக்களிலிருந்து ‘சி’ டிவிசன் குழு 160 வெற்றி புள்ளிகள் எடுத்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், 146 வெற்றிப் புள்ளிகள் எடுத்து ‘ஏ’ டிவிசன் குழு இரண்டாவது வெற்றியையும் பெற்றது.

இந்த விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும், இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதிகண்ணையன், செயலாளர் பிரியா சதீஸ்பிரபு, டிரஸ்டி சக்திவேல், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசியர்கள், மாணவர்கள்  மற்றும் உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி பங்கேற்றனர்.