கோவையில் கூடைப்பந்து போட்டி: மாநகராட்சி துணை மேயர் துவக்கி வைப்பு

கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகளை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தார்.

கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 18 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் கலந்து கொள்வார்கள். மே 29 தொடங்கிய இப்போட்டி ஜுன் 3 வரை 6 நாட்கள் நடைபெறும். முதல் நாள் போட்டியை கோவை வ.உ.சி மாநகராட்சி விளையாட்டு அரங்கில் துணை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் புது டெல்லி, இந்தியன் இரயில்வேஸ் அணியை எதிர்த்து திருவனந்தபுரம், கேரளா போலீஸ் அணி விளையாடியது. இதில் இந்தியன் இரயில்வேஸ் அணி 72 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய கேரளா போலீஸ் அணி 58 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.