ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தும் ஹெல்த் கெயின் பாலிசி

தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (RGICL) ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் எனும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப அம்சங்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்ததற்கு மட்டுமே பணம் செலுத்துவதன் மூலம் அவர்களின் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை வடிவமைக்கும் வாய்ப்பை இதன் மூலம் வழங்குகிறது.

பிளஸ், பவர் மற்றும் பிரைம் ஆகிய மூன்று வெவ்வேறு திட்டங்களையும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பயனாக்கும் கொள்கையை எளிதாக்கும் அம்சங்களையும் RGICL வெளியிட்டுள்ளது. அனைத்து வயதுப் பிரிவையும் சார்ந்த நவீன கால வாடிக்கையாளர்களின் மாறி வரும் மற்றும் தனித்துவமான மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதாக இந்த பாலிசி அமைந்துள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ள வாடிக்கையாளர்களுக்கு, எந்தவொரு காப்பீட்டுத் தொகைக்கும் எந்த அம்சங்களையும் தேர்ந்தெடுக்கும் விருப்பங்களை இது வழங்குகிறது. தவிர, ₹3 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு பாலிசியில் வயது வரம்பு ஏதும் இல்லை. எனவே, மருத்துவ பாலிசி இல்லாத மூத்த குடிமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹெல்த் கெயின் பாலிசியைத் தேர்வு செய்யலாம்.

வாடிக்கையாளருக்குத் தாங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பதற்கும், அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு மட்டுமே பணம் செலுத்துவதற்காண வாய்ப்பளிக்கும் வகையிலும் பாலிசித் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து RGICL தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறுகையில்: சரியான காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முறையான முடிவெடுக்க இயலாமல் இருக்கின்றனர்.

ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிசியின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ‘பவர் ஆஃப் சாய்ஸ்’ வழங்க விரும்புகிறோம், இதன் மூலம் அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஹெல்த் இன்ஸ்யூரன்சை வடிவமைக்கும் தேர்வுகளை ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் பாலிசி வழங்கி ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசியை நிர்வகிக்க உதவும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.