ஜூன் 2 கொடிசியாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி ராஜா லைவ் கான்செர்ட் என்ற நேரடி இசை கச்சேரி கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி மைதானத்தில் ஜூன் 2-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறயுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அறிமுகம் விழாவில் கிருஷ்ணா கல்வி குழுமங்களின் அறங்காவலர் மலர்விழி குத்துவிளக்கு ஏற்றி டிக்கெட்களை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சி குறித்து ரசிகர்களுக்கு இளையராஜா கூறுகையில்: ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெர்குரி, ஶ்ரீ ஆர்ட்ஸ் மற்றும் அருண் ஈவென்ட்ஸ் இணைந்து செய்கின்றன. சக்தி மசாலாவுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் கரூர் வைசா வங்கியுடன் இணைந்து வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி பாடகர்கள் மனோ, கார்த்திக், எஸ்.பி.பி சரண், யுகேந்திரன் வாசுதேவன், விபாவாரி, ஸ்வேதா மோகன், அனிதா, பிரியா ஹிமேஷ், சுர்முகி ஆகியோர் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் 35,000 முதல் 40,000 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட்டுகளின் விலை ரூ.1000 முதல் ரூ.1,00,000/- வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ ஆர்ட்ஸ் சிவகுமார், அருண் ஈவென்ட்ஸ் அருண், கிரீன் & கிரீன் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு: 8883861616